மேலும் செய்திகள்
ஒரே நாளில் 3 பேர் கொலை செங்கையில் பயங்கரம்
12-May-2025
மறைமலைநகரில் கார் மோதி ஸ்வீட் மாஸ்டர் பலி
25-Apr-2025
மறைமலைநகர்:தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன், 45. கட்டட தொழிலாளியான இவர் சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஸ்ரீவாரி நகர் பகுதியில் கட்டுமான பணி செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து முருகன் உள்ளிட்டவர்கள் வேலை பார்த்து வந்த கட்டடத்தின் இரண்டாவது மாடியில் துாங்கி கொண்டு இருந்தனர்.நள்ளிரவில் முருகன் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத அனுப்பி வைத்தனர்.முருகன் மது போதையில் தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12-May-2025
25-Apr-2025