மாற்றுத்திறனாளிகள் தேசிய நிறுவனத்தில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த முட்டுக்காடில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தில், உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் நிகழ்ச்சி நடந்தது.இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவி உபகரணங்களை வழங்கினார்.ஆட்டிசம் பாதித்த பெற்றோர்களுக்கான ஆட்டிசம் விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சியையும், மாற்றுத்திறனாளின் மாணவர்கள் கல்வி கற்பதற்கான டிஜிட்டல் ஆய்வகத்தையும் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது:ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தைகள் மகத்தான ஆற்றலை பெற்றுள்ளனர். அவர்களின் திறமைகளை வெளிக்கொணர, அவர்களின் சிறப்புத் தேவைகளை பூர்த்தி செய்ய திறமையான பயிற்சியாளர்கள் மற்றும் இதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை உடைய தொழில் முனைவோர் தேவை.ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் பெற்றோருக்கு இரக்கம், தகவமைப்பு, ஏற்றுக்கொள்ளும் மனவலிமை, ஆதரவு போன்றவற்றை நாம் கூட்டாக வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.