உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டீ கடை ஊழியர்களை தாக்கிய வாலிபர் கைது

டீ கடை ஊழியர்களை தாக்கிய வாலிபர் கைது

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் பகுதியில் ரசாத். 23 என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி, அதேபகுதியை சேர்ந்த சேது 20, என்பவர் டீ கடைக்கு மது போதையில் கத்தியுடன் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது கடையில் இருந்த டீ மாஸ்டர் ஜீவானந்தத்திற்கு கையில் லேசான வெட்டுகாயம் ஏற்பட்டது. அதை தடுத்த ரசாத்துக்கும் கையில் லேசான வெட்டுகாயம் ஏற்பட்டது. பின் அங்கிருந்து சேது தப்பிச்சென்றார். இதுதொடர்பாக காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று சேதுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ