மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை
19-Oct-2024
மறைமலை நகர், : செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த, 22 வயதுடைய இளம்பெண், கடந்த 18ம் தேதி இரவு, செங்கல்பட்டு பகுதியில் உள்ள தெருவில், தன் அக்காவுடன் நடந்து சென்றார்.அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர், இளம்பெண்ணை பின்புறமாக இருந்து கீழே தள்ளி, அவரின் கையில் வைத்திருந்த மொபைல் போனை பறிக்க முயன்றார்.அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கத்தி கூச்சலிடவே, அந்த மர்ம நபர் பறித்த மொபைல் போனை கீழே போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார்.இது குறித்து, அந்த இளம்பெண் அளித்த புகாரின் படி, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வந்தனர்.அதில், பெண்ணிடம் மொபைல் போனை பறிக்க முயன்ற நபர், பீஹார் மாநிலம், மாஞ்சாளி பகுதியை சேர்ந்த யோகேந்திரமண்டேல் மகன் பகத்தேவ்குமார், 39, என்பது தெரிந்தது.அவர், செங்கல்பட்டு பகுதிகளில், தொடர்ந்து மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. பகத்தேவ்குமாரை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
19-Oct-2024