உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுமியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்ருதீன், 20. செங்கல்பட்டு அருகில், திருப்போரூர் கூட்ரோடு பகுதியில் உள்ள கோழி கடை ஊழியர். தன் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பெண்ணை, திருமணம் செய்வதாக, ஒரு மாதத்திற்கு முன் அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசில், பெற்றோர் புகார் அளித்தனர்.போலீசார் வழக்குப்பதிந்து தேடிவந்த நிலையில், தற்போது அவர்களை கண்டு பிடித்தனர். மாமல்லபுரம் மகளிர் போலீசார், சிறுமியிடம் விசாரித்து, வாக்கு மூலம் பெற்றனர். அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம், திருக்கழுக்குன்றம் போலீசார், பக்ருதீனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். சிறை அருகில் சென்றபோது, போலீசாரிடமிருந்து வாலிபர் தப்பினார். பின் திருப்போரூர் கூட்ரோடு அருகில், அவர் வேலை செய்த இறைச்சிக்கடை உரிமையாளரிடம், பணம் வாங்க சென்றவரை, மறைந்திருந்த போலீசார் மடக்கி பிடித்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி