உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செயலியில் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை

செயலியில் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை

படப்பை,தாம்பரம் அருகே படப்பை, பெரியார் நகரை சேர்ந்தவர் லோகநாதன், 35. ஒரகடத்தில் உள்ள கார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.மேலும், ஆன்லைன் செயலி வாயிலாக கடன் பெற்று, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளார். இதில், நஷ்டம் ஏற்பட்டு, 15 லட்சம் ரூபாய் இழந்ததாக கூறப்படுகிறது. கடன் பணத்தை கேட்டு, ஆன்லைன் செயலி நிர்வாகத்தினர் தொல்லை கொடுத்துள்ளனர். இந்நிலையில், லோகநாதனின் மனைவி அருள்மொழி, 32, கோபித்துக்கொண்டு, தாய் வீட்டிற்கு பிரிந்து சென்றுவிட்டார்.ஏற்கனவே ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் இழந்த நிலையில், மனைவியும் பிரிந்து சென்றதால், மன உளைச்சலில் இருந்த லோகநாதன், நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார், உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை