உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தேள் கொட்டி இளைஞர் பலி

தேள் கொட்டி இளைஞர் பலி

செய்யூர்: வீரபோகத்தில் விவசாய வேலை செய்த போது தேள் கொட்டியதில் இளைஞர் உயிரி ழந்தார். செய்யூர் அடுத்த, வீரபோகம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன், 32; விவசாயி. கடந்த 5ம் தேதி, காலை 10:00 மணிக்கு டிராக்டரில் ஏர் உழுது கொண்டிருந்தார். ஏர்கலப்பையில் மரம் சிக்கியதால், இறங்கி கலப்பையில் சிக்கிய மரத்தை அகற்றியபோது, மரத்தில் இருந்த தேள் பாண்டியனின் வலது கையில் கொட்டியது. பின், பவுஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார். செய்யூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி