மேலும் செய்திகள்
இருசக்கர வாகனம் திருடிய வாலிபருக்கு 'காப்பு'
06-Oct-2025
மேல்மருவத்துார்:சோத்துப்பாக்கம் அருகே, 'பைக்'கில் சென்ற வாலிபர், கார் மோதி பலியானார். அச்சிறுபாக்கம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன், 22. இவர், மேல்மருவத்துார் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். நேற்று, வெங்கடேசபுரத்திலிருந்து திருவளச்சேரி பகுதிக்கு, அவருக்குச் சொந்தமான 'ஹீரோ ஹோண்டா ஸ்பிௌண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, வந்தவாசி -- செய்யூர் மாநில நெடுஞ்சாலையில், சோத்துப்பாக்கம் அருகே பொறையூர் கூட்டுச்சாலை சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, சோத்துப்பாக்கம் பகுதியில் இருந்து செய்யூர் நோக்கிச் சென்ற 'எர்டிகா' கார், எதிர்பாராத விதமாக கேசவனின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில், கேசவன் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற மேல்மருவத்துார் போலீசார், கேசவன் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தலைமறைவானதால், காரை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
06-Oct-2025