உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக் மீது ஆம்னி பஸ் மோதி கடப்பாக்கம் அருகே வாலிபர் பலி

பைக் மீது ஆம்னி பஸ் மோதி கடப்பாக்கம் அருகே வாலிபர் பலி

சூணாம்பேடு:கடப்பாக்கம் அருகே, பைக்கின் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிரிழந்தார்.கடலுார் மாவட்டம், மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 25; கூலித்தொழிலாளி.இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில்,'ஹீரோ பேஷன் புரோ' பைக்கில், மஞ்சக்குப்பத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக, சென்னை நோக்கிச் சென்றார்.கடப்பாக்கம் அடுத்த கோட்டைக்காடு அருகே சென்ற போது, எதிரே நாகர்கோவில் நோக்கி, 45 பயணியருடன் வந்த தனியார் ஆம்னி பேருந்து, பைக்கின் மீது மோதியது.இதில் படுகாயமடைந்த மணிகண்டன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே, ஆம்னி பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பினார்.தகவலின்படி சம்பவ இடத்திற்குச் சென்ற சூணாம்பேடு போலீசார், மணிகண்டன் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து வழக்கு பதிந்து, ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்தனர். தப்பிச் சென்ற ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை