உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொது தேரில் மின்கம்பி உரசி ஒரத்தியில் இளைஞர் பலி

பொது தேரில் மின்கம்பி உரசி ஒரத்தியில் இளைஞர் பலி

அச்சிறுபாக்கம்,:செங்கல்பட்டு மாவட்டம், ஒரத்தி கிராமத்திலுள்ள திரவுபதி அம்மன் கோவிலில், மகாபாரத திருவிழா நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு, உபயதாரர்கள் வாயிலாக, இரும்பால் செய்யப்பட்ட தேரில், மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, டிராக்டர் வாகனத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது.இரவு 11:30 மணியளவில், ஒரத்தி ஆரம்ப சுகாதார நிலையம் தெருவில், தேரில் சுவாமி ஊர்வலம் வரும் போது, அங்கு தாழ்வாக சென்ற உயரழுத்த மின் கம்பியில் தேர் உரசி, தீப்பற்றி எரிந்தது.இதில், தேரில் அமர்ந்து வந்த ஒரத்தி பகுதியைச் சேர்ந்த ராம்குமார், 23, என்பவர், தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உடன் அமர்ந்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன், 35, சிவா, 25, ஜானகிராமன், 16,குப்பன், 40, ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்து, படுகாயமடைந்தனர்.அங்கிருந்தோர் அவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அனுப்பி வைத்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஒரத்தி போலீசார், ராம்குமார் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை