மேலும் செய்திகள்
பட்டம் வினாடி - வினா போட்டி
2 minutes ago
இன்று இனிதாக (நாள்/28/11/2025/வெள்ளி)
5 minutes ago
மாற்றுத்திறனாளி கவுன்சிலர்கள் பதவியேற்பு
23 hour(s) ago
சாலை நடுவே இருந்த மின்கம்பம் அகற்றம்
23 hour(s) ago
சிங்கபெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில் அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சந்தேகத்தின்படி மூவரைப் பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். சிங்கபெருமாள் கோவில் அடுத்த காச்சேரிமங்கலம் ஏரியில், வெட்டுக் காயங்களுடன் முகம் சிதைந்து, இறந்த நிலையில் 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, சிங்கபெருமாள் கோவில் போலீசாருக்கு, நேற்று காலை 7:00 மணியளவில் தகவல் கிடைத்து உள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, தென்மேல்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்படி, சிங்கபெருமாள் கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், இறந்த வாலிபர் செங்கல்பட்டு அடுத்த பரனுார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்,20, எனத் தெரிந்தது. இதையடுத்து சந்தேகத்தின்படி, கூடுவாஞ்சேரி அடுத்த காரணைபுதுச்சேரி பகுதியைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா விற்பனை தொடர்பான மோதல் காரணமாக ஆகாஷ் கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும், போலீசார் விசாரித்து வருகின்றனர். எல்லை பிரச்னை கொலை சம்பவம் நடந்த பகுதியானது சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் எல்லைப் பகுதி என்பதால், எந்த போலீசார் விசாரணை நடத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த பகுதி காச்சேரிமங்கலம் பகுதியில் வருவதை உறுதி செய்தனர். இதையடுத்து, சிங்கபெருமாள் கோவில் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 minutes ago
5 minutes ago
23 hour(s) ago
23 hour(s) ago