ஆயுள் கைதி திடீர் மரணம்
புழல் நீலகிரி மாவட்டம், கூடலுார் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அப்பாஸ், 57. இவர் 2022ம் ஆண்டு, 'போக்சோ' வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை கைதியாக கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.அவருக்கு கல்லீரல் பிரச்னை இருந்ததால், கடந்த மாதம் புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு, சிறை மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.உடல் நிலை மிகவும் மோசமாக, மேல் சிகிச்சைக்காக கடந்த 20ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.