வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஐய்யப்பன்தாங்கல் பஞ்சாயத்து மற்றும் பரணிபுத்தூர் பஞ்சாயத்துகளை ஆலந்தூர் மண்டலத்துடன் இணைக்கவேண்டும்
சென்னை,சென்னை மாநகராட்சி மண்டலங்கள் புதிதாக பிரிக்கவுள்ளதாக அரசாணை வெளியான நிலையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள் எதிர்ப்பால் நிறுத்தி வைக்க, நகராட்சி நிர்வாகத்துறை முடிவு செய்துள்ளது. ஒரு தொகுதி, மூன்று மண்டலங்களில் வருவதால், தீர்வு காண்பது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.சென்னை மாநகராட்சி, 174 சதுர கி.மீ., பரப்பில், 155 வார்டுகளை உடைய, 10 மண்டலமாக செயல்பட்டது.நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை சேர்க்கும் வகையில், புறநகரின் ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, 426 சதுர கி.மீ., பரப்பில், 2011ல் சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது.அதன்படி, 200 வார்டுகள், 15 மண்டலங்கள் உடைய மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், சென்னை மாநகராட்சி எல்லையில், 22 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆனால், 16 சட்டசபை தொகுதிகள் மட்டுமே, சென்னை மாவட்டத்தில் உள்ளன. மற்ற சட்டசபை தொகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளன.மேலும், மாநகராட்சி மண்டலத்தின் நிர்வாக எல்லைகளும், சட்டசபை தொகுதிகளின் எல்லைகளும், ஒருசேர அமையவில்லை. இதன் காரணமாக, பல்வேறு நிர்வாக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.எனவே, மக்கள்தொகை அதிகரிப்பு, துரித சேவை, நிர்வாக வசதி போன்ற காரணங்களால், சட்டசபை தொகுதி வாரியாக மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது.அதன்படி, 15 மண்டலங்களுடன் உள்ள மாநகராட்சியில், நிர்வாக வசதிக்காக, சட்டசபை தொகுதி வாரியாக, 20 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன.அதில், 22 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி மண்டலங்கள் பிரிக்கப்பட்டாலும், மீண்டும் ஒருசேர சட்டசபை தொகுதி என்ற அடிப்படையில் மண்டலங்கள் பிரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, ஒரு சட்டசபை தொகுதி, மூன்று அல்லது நான்கு மண்டலங்களில் வருகின்றன. அத்துடன், பெருங்குடி, சோழிங்கநல்லுார், அடையாறு, மணலி உள்ளிட்ட மண்டல தலைவர்கள் சிலர், புதிதாக பிரிக்கப்பட்டதில், ஒரே மண்டலத்தில் வருவதால், அவர்களின் ஒருவரது தலைவர் பதவி பறிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், தங்கள் தொகுதி வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு, மூன்று மண்டல உதவி அலுவலர்களிடமும் தனித்தனியாக பேச வேண்டுமா என, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், மண்டலம் பிரிப்பு அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனால், மாநகராட்சி மண்டலம் பிரிப்பு நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தற்போது பிரிக்கப்பட்ட மண்டலங்களுக்கு, கவுன்சிலர்கள் முதல் எம்.எல்.ஏ.,க்கள் வரை எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.இதன் காரணமாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, மக்கள் பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.அதில், அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், பரிந்துரைப்படி, சில மண்டலங்கள் மாற்றி அமைக்கப்படும். அதுவரை, தற்போது பிரிக்கப்பட்ட மண்டலங்களின் மறுவரையறை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மண்டலங்கள் வார்டு எண்ணிக்கை சட்டசபை தொகுதிகள்திருவொற்றியூர் 19 மாதவரம், பொன்னேரி, திருவொற்றியூர் மாதவரம் 14 மாதவரம், திருவொற்றியூர் பெரம்பூர்/ஆர்.கே.நகர் 11 ஆர்.கே.நகர், பெரம்பூர்ராயபுரம்/துறைமுகம் 12 துறைமுகம், ராயபுரம் கொளத்துார் 12 கொளத்துார், பெரம்பூர், திரு.வி.க.நகர்அம்பத்துார் 13 அம்பத்துார், மதுரையவாயல்வில்லிவாக்கம் 8 அண்ணாநகர், வில்லிவாக்கம்அண்ணாநகர் 7 அண்ணாநகர், எழும்பூர்திரு.வி.க.நகர்/எழும்பூர் 10 சேப்பாக்கம்/திருவல்லிக்கேணி, எழும்பூர், திரு.வி.நகர்சேப்பாக்கம்/திருவல்லிக்கேணி 8 சேப்பாக்கம்/திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்ஆயிரம்விளக்கு 9 ஆயிரம்விளக்கு, மயிலாப்பூர் தி.நகர் 9 தி.நகர், விருகம்பாக்கம்விருகம்பாக்கம் 10 விருகம்பாக்கம், மதுரவாயல்மதுரவாயல் 9 மதுரவாயல் ஆலந்துார் 12 ஆலந்துார், சோழிங்கநல்லுார், பல்லாவரம்சைதாப்பேட்டை 8 சைதப்பேட்டை, வேளச்சேரிவேளச்சேரி 9 மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி பெருங்குடி 7 சோழிங்கநல்லுார், வேளச்சேரி மடிப்பாக்கம் 6 ஆலந்துார், சோழிங்கநல்லுார்சோழிங்கநல்லுார் 7 சோழிங்கநல்லுார்
ஐய்யப்பன்தாங்கல் பஞ்சாயத்து மற்றும் பரணிபுத்தூர் பஞ்சாயத்துகளை ஆலந்தூர் மண்டலத்துடன் இணைக்கவேண்டும்