உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / --மக்களின் கனவுகள் நிஜமாக்கும் நவீன்ஸ் - செக்டார் குடியிருப்பு

--மக்களின் கனவுகள் நிஜமாக்கும் நவீன்ஸ் - செக்டார் குடியிருப்பு

சென்னை: மக்களின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், நவீன்ஸ் நிறுவனம், 'செக்டார்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: நவீன்ஸ் நிறுவனத்தின் சார்பில், மேடவாக்கத்தில், 9.85 ஏக்கர் நில பரப்பில், 'நவீன்ஸ் ஸ்டார்வுட்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில், 750க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், வீடு வாங்கி, மன நிறைவுடன் வாழ்ந்து வருகின்றனர். இறுதி கட்டமாக நவீன்ஸ் 'ஸ்டார்வுட் செக்டார் டவர்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இங்கு, 1,908 முதல், 2,140 சதுர அடி வரையிலான வெவ்வேறு அளவுகளில், மூன்று படுக்கை அறை வீடுகள் கட்டப்படுகின்றன. வீட்டிலேயே பணியாற்றுவதற்கான இடம், குடும்பத்தினர் பேசி மகிழ்வதற்கான இடம் என, பல்வேறு வசதிகளுடன் அமைகிறது. வளாகத்தில், கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், நுாலகம், குழந்தைகள் விளையாடுமிடம், சூப்பர் மார்க்கெட், மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நவீன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் விஸ்வஜித் குமார் கூறுகையில், ''நவீன யுகத்தில், மக்களின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், இந்த குடியிருப்பை வடிவமைத்து உருவாக்கி இருக்கிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை