வாசகர்கள் கருத்துகள் ( 1 )
This arrangement has already failed. Earlier the traffic jam was on the signal only. Now the traffic jam has started in pallikkaranai Velachery road also with large vehicles taking ‘U’ turn. It is not chaos now
வேளச்சேரி- - தாம்பரம் சாலையில், பள்ளிக்கரணை, நாராயணபுரம் பகுதியில் மேம்பாலம் அமைத்தும், தினசரி ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, பல்லாவரம்- - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், யு - -டர்ன் அமைத்து, போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.தென்சென்னை, ஜி.எஸ்.டி., சாலையையும், ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளையும் இணைக்கும் வகையில், 25 ஆண்டுகளுக்கு முன் ரேடியல் சாலை அமைக்கப்பட்டது.ராஜிவ்காந்தி சாலையில் ஐ.டி., நிறுவனங்களின் வரத்து காரணமாக, தென்சென்னையின் மக்கள் தொகை, 15 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்தது. இதனால், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.இதனால், ரேடியல் சாலை, தாம்பரம் - -வேளச்சேரி சாலை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்தன. குறிப்பாக, 'பீக்- ஹவர்ஸ்' எனும் காலை, மாலை வேளைகளில், இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. மெட்ரோ பணி
இதையடுத்து, ரேடியல் சாலை இடையே, தாம்பரம் - -வேளச்சேரி சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்தது. தற்போது, ராஜிவ்காந்தி சாலையில், மெட்ரோ திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.அங்கு, போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த ஆலந்துார், ஆதம்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் பகுதிவாசிகள், விஜயநகர், பள்ளிக்கரணை, நாராயணபுரம் ரேடியல் சாலை வழியாக, துரைப்பாக்கம் செல்வது அதிகரித்தது. போக்குவரத்து மாற்றம்
அதேபோல, பரங்கிமலை- - மேடவாக்கம் சாலையிலும் மெட்ரோ திட்டப் பணிகள் நடப்பதால், பல்லாவரம், தாம்பரம் செல்வோர் ரேடியல் சாலையை அதிகம் பயன்படுத்த துவங்கினர்.இதனால், நாராயணபுரம் மேம்பாலத்தின் அணுகு சாலையில், மீண்டும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பல்லாவரம், பள்ளிக்கரணையில் இருந்து துரைப்பாக்கம் செல்வோர், விஜயநகரில் இருந்து பல்லாவரம் செல்வோர், பாலத்தின் அடியில் உள்ள சிக்னலில் சிக்கி தவித்தனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, ரேடியல் சாலையில் தற்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டியன் கூறியதாவது:விஜயநகரில் இருந்து மடிப்பாக்கம் திரும்பும் வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு, வேளச்சேரி- - தாம்பரம் சாலையில், 'யு - -டர்ன்' கொடுத்ததன் பலனாக, அங்கு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைத்துள்ளது.அதபோல, பள்ளிக்கரணை, நாராயணபுரம் மேம்பாலம் பகுதியிலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி- - தாம்பரம் சாலையில் இருந்து கீழ்க்கட்டளை, பல்லாவரம் செல்வோர் அணுகு சாலையில் இடது புறம் திரும்பி, 300 மீட்டர் தொலையில், 'யு - -டர்ன்' செய்து செல்ல வேண்டும்.அங்கு, நாராயணபுரம் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் போக்கு கால்வாய் அமைக்கும் பணி நடப்பதால், பள்ளிக்கரணையில் இருந்து துரைப்பாக்கம் செல்வோர், வழக்கம் போல வலதுபுறம் திரும்பி செல்லலாம்.அப்பணி முடிந்ததும், பள்ளிக்கரணையில் இருந்து இடது புறம் திரும்பி, ரேடியல் சாலையில் கொடுக்கப்பட்டுள்ள, 'யு-டர்ன்' வாயிலாக செல்லலாம். அணுகு சாலை
மேலும், பள்ளிக்கரணையில் இருந்து மேம்பாலத்தில் ஏறி இறங்கி, தாம்பரம்- - வேளச்சேரி சாலையில் கொடுக்கப்பட்டுள்ள, 'யு - டர்ன்' செய்து, அணுகு சாலை வழியாக, ரேடியல் சாலை அடைந்து துரைப்பாக்கம் செல்லலாம்.அதேபோல, விஜயநகரில் இருந்து கீழ்க்கட்டளை, பல்லாவரம் செல்லும் வாகனங்கள், நாராயணபுரம் மேம்பாலம் ஏறி இறங்கி, வேளச்சேரி- - தாம்பரம் சாலையில் உள்ள பாலாஜி பல் மருத்துவ கல்லுாரி சிக்னலில், 'யு - -டர்ன்' செய்து, அணுகு சாலை வழியாக ரேடியல் சாலையை அடையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.- -நமது நிருபர்- -
This arrangement has already failed. Earlier the traffic jam was on the signal only. Now the traffic jam has started in pallikkaranai Velachery road also with large vehicles taking ‘U’ turn. It is not chaos now