உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 14 கிலோ கஞ்சா சென்ட்ரலில் பறிமுதல்

14 கிலோ கஞ்சா சென்ட்ரலில் பறிமுதல்

சென்னை, மேற்குவங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு நேற்று காலை விரைவு ரயில் வந்தது. அதில் வந்த பயணியரை, ரயில்வே போலீசார் கண்காணித்தனர்.அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கிருந்து வெளியேற முயன்ற வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். தொடர்ந்து, அவரது பையை சோதித்தபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவரிடம் இருந்து, 2.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், ஒடிசாவைச் சேர்ந்த ராமகாந்த பாலயராசிங், 26, ஒடிசா மாநிலம் பிரம்மபூரில் இருந்து கஞ்சா எடுத்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி