உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 19 உதவி கமிஷனர்கள் சென்னையில் மாற்றம்

19 உதவி கமிஷனர்கள் சென்னையில் மாற்றம்

சென்னை, சென்னையில் 19 போலீஸ் உதவி கமிஷனர்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சென்னை நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பெண்களுக்கு எதிரான புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை போலீஸ் கமிஷனரக மக்கள் தொடர்பு அலுவலர் விஜயராமுலு, கிண்டி உதவி கமிஷனராகவும், வடபழனி உதவி கமிஷனர் அருள் சந்தோஷ முத்து, நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பணியிட மாற்றப்பட்டுள்ளனர்.அதன்படி, சென்னையில், 19 உதவி கமிஷனர்களை பணியிட மாற்றம் செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ