ஆடிட்டர் வீட்டில் திருடிய 2 பேர் கைது 150 கிராம் உருக்கிய தங்கம் பறிமுதல்
வியாசர்பாடி, வியாசர்பாடி, பொன்னப்பன் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 51; தியாகராய நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆடிட்டர்.இவரது மனைவி செல்வி, எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.கடந்த 2024, செப்., மாதம், மகள்கள் கல்லுாரிக்கு சென்ற நிலையில், கணவன் - மனைவி இருவரும் வீட்டை பூட்டி, வேலைக்கு சென்றனர்.அப்போது மர்ம நபர்கள், கடந்தாண்டு செப்., மாதம், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 57 சவரன் நகையை திருடிச் சென்றனர்.இது குறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட, மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஐவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி சசிகாந்த்மானே, 28, அனில், 36, ஆகிய இருவரையும், வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், நீதிமன்ற காவலில் எடுத்து மஹாராஷ்டிராவிற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.திருடிய நகைகளை உருக்கி வைத்திருந்த 150 கிராம் தங்கத்தை, அங்கு பறிமுதல் செய்தனர். அந்த இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, சிறையில் அடைத்தனர்.