உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2 பைக்குகள் தீயில் நாசம்

2 பைக்குகள் தீயில் நாசம்

மேடவாக்கம், பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம், அன்னபூரணி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 77. மனைவி, மகள் ஆகியோருடன் வசிக்கிறார்.நேற்று முன்தினம் இரவு, 'யமாஹா ரே, ஹோண்டா ஆக்டிவா' ஆகிய இருசக்கர வாகனங்களை வீட்டின் 'பார்க்கிங்' பகுதியில் நிறுத்தியிருந்தார்.நள்ளிரவில், இரண்டு பைக்குகளும் திடீரென தீ பற்றியது. வீட்டிற்குள் வந்த திடீர் வெளிச்சத்தை பார்த்து பாலசுப்பிரமணியன் வெளியே வருவதற்குள், இரு வாகனங்களும் முழுதுமாக எரிந்து கிடந்தன.பாலகிருஷ்ணன் புகாரின்படி, பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர். பைக்குகளின் பேட்டரியில் 'ஷார்ட் சர்க்யூட்' ஆனதால் தீ பற்றியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை