மேலும் செய்திகள்
பனி மூட்டம்: விமான சேவை பாதிப்பு
09-Feb-2025
சென்னை: கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் இருந்து மதியம் 1:05 மணிக்கு சென்னை வரும் விமானம் மற்றும் சென்னையில் இருந்து பகல் மதியம் 1:40 மணிக்கு, ஷிவமொக்கா செல்லும் விமானங்கள், முன்னறிவிப்பின்றி நேற்று ரத்து செய்யப்பட்டன. விமான நிலையம் வந்த பயணியர் செய்வதறியாமல் திணறினர். சென்னையில் இருந்து பாங்காக், சிங்கப்பூர், இலங்கை, ஹாங்காங், மஸ்கட், டில்லி, மும்பை, கோவா, ஆமதாபாத், பெங்களூரு. உள்ளிட்ட 10 விமானங்களின் புறப்பாடு மற்றும் பாங்காக், சிங்கப்பூர், மும்பை, டில்லி ஆகிய நான்கு விமானங்களின் வருகை என, மொத்தம் 14 விமானங்களின் சேவையில் இரண்டு மணி நேரம் வரை காலதாமதம் ஏற்பட்டது.விமானம் ரத்து அல்லது தாமதாக புறப்படும் என்றால் எஸ்.ஓபி., முறைப்படி பயணியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், சென்னை விமான நிலைய அதிகாரிகள் முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவை பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
09-Feb-2025