உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமி பாலியல் வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு

சிறுமி பாலியல் வழக்கு வாலிபருக்கு 20 ஆண்டு

சென்னை,சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், 19, மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர், 2019ம் ஆண்டு, 13 வயது சிறுமியை, அந்த பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடத்துக்கு துாக்கி சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில், பிரகாஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் மீது, அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரகாஷ் கைது செய்யப்பட்டார். 16 வயது சிறுவன் மீதான வழக்கு, சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.பிரகாஷ் மீதான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது.நேற்றைய விசாரணையின் முடிவில், பிரகாஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை