உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 213 கிலோ பிளாஸ்டிக் பை 6 மாதங்களில் பறிமுதல்

213 கிலோ பிளாஸ்டிக் பை 6 மாதங்களில் பறிமுதல்

ஆலந்துார், ஆலந்துார் மண்டலத்தில் உள்ள 12 வார்டுகளிலும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்கப்படுகின்றன.பெரிய வர்த்தக நிறுவனங்கள், கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், தெருவோரக் கடைகளில் மட்டும் பரவலாக காணப்படுகிறது.கடந்த ஆறு மாதங்களில் மண்டலம் முழுதும், 3,000க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, 213 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.அக்கடைகளுக்கு, 1.13 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும் என, ஆலந்துார் மண்டல மாநகராட்சி சுகாதார மண்டல அலுவலர் சுதா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை