உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ், ஆட்டோவில் போன் பறித்த மாணவர் உட்பட 3 பேர் சிக்கினர்

பஸ், ஆட்டோவில் போன் பறித்த மாணவர் உட்பட 3 பேர் சிக்கினர்

சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 26. இவர், கடந்த 24ம் தேதி இரவு, சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் இருந்து தடம் எண்: 1ஏ பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, இளைஞர் ஒருவர் உரசியபடி நின்றுள்ளார்.திடீரென அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சென்றபோது, சந்தேகத்தின்படி, கோபாலகிருஷ்ணன் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் போனை பார்த்துள்ளார். திருடப்பட்டது தெரியவந்தது.இது குறித்து பூக்கடை போலீசார் விசாரணையில் ஒடிசாவைச் சேர்ந்த தாஸ் சாண்டு, 18, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவரை, நேற்று கைது செய்தனர்.கொடுங்கையூர், எழில் நகரைச் சேர்ந்தவர் கீதா, 27. இவர் கடந்த டிச., 2ம் தேதி, செங்குன்றம் செல்வதற்காக, ஆட்டோவில் மொபைல்போனில் பேசியபடி, கண்ணதாசன் நகர், பாரத் பெட்ரோல் 'பங்க்' அருகில் சென்றார். அப்போது, பைக்கில் வந்த இருவர், கீதாவின் மொபைல் போனை பறித்து தப்பிச் சென்றனர்.இதுகுறித்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து புளியந்தோப்பு 3வது தெருவைச் சேர்ந்த நித்தியானந்தம், 20, திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு, ஆதிபுரிஸ்வரர் நகரைச் சேர்ந்த கல்லுாரி மாணவரான ஹரிஷ், 21, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.அவர்களிடம் இருந்த மொபைல்போன், பைக் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ