உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 485 பேரின் ஓட்டு ௶மிஸ்ஸிங்: வாக்காளர்கள் அதிர்ச்சி

485 பேரின் ஓட்டு ௶மிஸ்ஸிங்: வாக்காளர்கள் அதிர்ச்சி

திருவொற்றியூர், திருவொற்றியூர் மேற்கு, சார்லஸ் நகரில், நான்கு தெருக்கள் உள்ளன. இப்பகுதி, 163 - 164 என, இரு ஓட்டுச்சாவடி மையங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 163வது ஓட்டுச்சாவடியில் 911 ஓட்டுகளும்; 164ல், 1,200 ஓட்டுகளும் உள்ளன.இந்நிலையில், இப்பகுதியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த வீடுகளில் வசிக்கும் பலருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது.பெயர் விடுபட்ட 50க்கும் மேற்பட்டோர், சார்லஸ் நகர், தேவி கருமாரியம்மன் கோவில் முன் நேற்று கூடி, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் கூறியதாவது:கடந்த கவுன்சிலர் தேர்தலில் ஓட்டளித்த பலரது பெயர், இந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது. அதன்படி, 485 பெயர்கள் விடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.இதுகுறித்து, மண்டல தேர்தல் அலுவலகத்தை அணுகினால், அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். இரு தினங்களில் இதற்கு முடிவு காணாவிட்டால், தேர்தலை புறக்கணிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ