மேலும் செய்திகள்
17 சவரன் தங்க நகைகள் ரொக்கம் திருட்டு
22-Aug-2024
கொடுங்கையூர், சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரை சேர்ந்தவர் மலர்விழி, 60. கடந்த ஜூன் மாதம், பாத்ரூமில் தவறி வழுக்கி விழுந்ததில் மலர்விழி காயமடைந்தார். இதையடுத்து, அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கியிருந்து ஓய்வு எடுத்து வந்தார். மலர்விழி உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததையடுத்து, கடந்த 19ம் தேதி, தன் வீட்டிற்கு திரும்பினார். நேற்று வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்த போது, 54 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது புகார் படி, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
22-Aug-2024