மேலும் செய்திகள்
மாணவியிடம் மொபைல் பறித்த சிறுவன் கைது
25-Feb-2025
சென்னை, ஐஸ்ஹவுசில், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார், 20,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.ஐஸ்ஹவுஸ் போலீசார், நேற்று முன்தினம் இரவு திருவல்லிக்கேணி, முருகப்பா தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கையும் களவுமாக பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சம்பத், 48, சுந்தர், 48, உட்பட, 6 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.நேற்று, அந்த 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 20,000 ரூபாய் மற்றும் 5 சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
25-Feb-2025