உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராஜ்பவனை முற்றுகையிட வந்தோரால் சலசலப்பு

ராஜ்பவனை முற்றுகையிட வந்தோரால் சலசலப்பு

தாம்பரம், மதுரையைச் சேர்ந்த சகோதரியர் நந்தினி, 31, நிரஞ்சனா, 26. இருவரும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வப்போது போராட்டம் நடத்துவது வழக்கம். இந்த நிலையில், ஓட்டுச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி, கவர்னர் மாளிகையை முற்றுகையிட, நேற்று முன்தினம் இரவு, இருவரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரையில் இருந்து சென்னை வந்தனர்.இத்தகவலை அறிந்த, தாம்பரம் மற்றும் ரயில்வே போலீசார், சகோதரியரை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இறக்கி, விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இருவரையும், ரயிலில் மதுரைக்கு திருப்பி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை