உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பன்றியை பிடிக்க நாட்டு வெடி சிக்கிய பசுவின் வாய் கிழிந்தது

பன்றியை பிடிக்க நாட்டு வெடி சிக்கிய பசுவின் வாய் கிழிந்தது

திருவாலங்காடு:திருவாலங்காடு அடுத்து அமைந்துள்ளது வியாசபுரம் கிராமம். இங்கு சென்னை கோபால புரத்தை சேர்ந்த சன்ராஜ், 50 என்பவர் 70க்கும் மேற்பட்ட பசு மாடுகளை கொண்டு பண்ணை அமைத்து பராமரித்து வருகிறார்.கடந்த 21ம் தேதி மேய்ச்சலுக்கு சென்ற ஒரு பசு பண்ணைக்கு திரும்பவில்லை. அதை தேடிய போது சின்னம்மாபேட்டை ஓடைக்கால்வாய் அருகே வாய்ப்பகுதி முழுதும் சேதமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது.பசுவை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அப்போது பசு நாட்டு வெடிகுண்டை கடித்தபோது, அது வெடித்ததில் வாய்ப்பகுதி சேதமடைந்தது தெரியவந்தது. இதுகுறித்து சன்ராஜ் திருவாலங்காடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.காட்டுப்பன்றியை பிடிக்க விவசாய நிலங்கள், ஓடைப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைக்கும் நிலை அப்பகுதிகளில் உள்ளது. பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு வைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ