உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அமெரிக்க ஹிந்து கோவிலுக்கு காஞ்சியில் தயாரான தங்க தேர்

அமெரிக்க ஹிந்து கோவிலுக்கு காஞ்சியில் தயாரான தங்க தேர்

காஞ்சிபுரம், அமெரிக்காவின், வாஷிங்டன் மாகாணம், சியாட்டலில் ஹிந்து வேதா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, புதிதாக தங்க தேர் செய்து கொடுக்க, காஞ்சிபுரத்தில் உள்ள 'ராஜா ஆன்மிக பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திடம், கோவில் நிர்வாகம் கேட்டிருந்தது.கோவில் நிர்வாகம் கூறியிருந்தபடி 23 அடி உயரம், 8 அடி அகலம் உடைய தாமிர உலோக தேரின் மீது, தங்க முலாம் பூசும் பணி நிறைவடைந்தது. இந்த தேர் பெங்களூரு விமான நிலையம் வாயிலாக, அமெரிக்காவுக்கு நேற்று அனுப்பப்பட்டது.இதுகுறித்து காஞ்சிபுரம் ராஜா ஆன்மிக பிரைவேட் லிமிடெட் இயக்குனர் நாகராஜன் கூறியதாவது:இந்த தங்க தேரின் முக்கிய பாகங்கள், மரத்தால் இல்லாமல் இரும்பால் செய்யப்பட்டு உள்ளன. தேர் எட்டு பாகங்களாக எளிதாக பிரிக்க முடியும். அதேபோல, குறுகிய இடத்தில் எளிதாக 35 டிகிரி வரை திருப்ப முடியும்.தேரின் மீது, தாமிர தகடுகளில் 'எலக்ட்ரோ பிளேட்டிங்' முறையில் தங்க முலாம் பூசப்பட்டுஉள்ளது.தேர் செய்யும் பணியில், ஆறு குழுக்களாக, ஒரு குழுவுக்கு 6 பேர் வீதம், 36 பேர் சேர்ந்து, 75 நாட்களில், இரவு, பகலாக பணியில் ஈடுபட்டோம். இதன் மொத்த எடை 3.50 டன்; மதிப்பு 1.25 கோடி ரூபாய். தேரின் மேல் பாகம் நான்கு நிலைகள் உள்ளன.அதில், கருடன் மற்றும் கந்தர்வன் சிலைகளும், முகப்பில் இரு குதிரைகளை சூரிய பகவான் இயக்குவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களில் அமெரிக்காவில் உள்ள கோவிலுக்கு சென்றடையும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ