உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீனவரை தாக்கிய மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

மீனவரை தாக்கிய மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

காசிமேடு: காசிமேடு, சிங்கார வேலர் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 34; மீனவர். நேற்று முன்தினம், மீன்கள் ஏலம் விடும் இடத்தில் நடந்து சென்ற போது, நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர். தர மறுக்கவே, அவர் முகத்தில் தாக்கி விட்டு தப்பியோடினர். இதில், அவரது மூக்கு உடைந்தது. அவர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ