உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நுாதனமாக ரூ.22.75 கோடி மோசடி செய்தவர் பிடிபட்டார்

நுாதனமாக ரூ.22.75 கோடி மோசடி செய்தவர் பிடிபட்டார்

ஆவடி, மார்ச் 6--குரோம்பேட்டை, நெமிலிச்சேரியைச் சேர்ந்தவர் கார்த்திக், 41. இவரிடம், 2021ம் ஆண்டு, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த மது ஹரிகிருஷ்ண ரெட்டி, 39, அறிமுகமாகி உள்ளார்.குன்றத்துார் கெருகம்பாக்கத்தில், தன் உறவினர்களின், 3.37 ஏக்கர் நிலம் அடமானத்தில் உள்ளது. நிலத்தை மீட்டு மனையாக மாற்றி விற்றால், அதிக லாபம் கிடைக்கும் என, கார்த்திக்கிடம் ஆசை காட்டியுள்ளார்.இதை நம்பிய கார்த்திக், கடனை அடைக்கவும், நிலத்தை மனையாக பிரிக்கவும், 22.75 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அதை வாங்கிய மது ஹரிகிருஷ்ண ரெட்டி, நிலத்தை கிரையம் செய்து தராமல் ஏமாற்றி உள்ளார்.கார்த்திக் கொடுத்த புகாரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த, மது ஹரிகிருஷ்ண ரெட்டியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை