உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மது போதையில் தகராறு வாலிபர் அடித்து கொலை

மது போதையில் தகராறு வாலிபர் அடித்து கொலை

ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே, கொசவன்பேட்டை எஸ்.டி.காலனியைச் சேர்ந்தவர்கள் முருகவேல், 34, நாகராஜ், 44. இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த வீட்டிற்கு பாம்பு பிடிக்க சென்றனர். வழியில் இருவரும் மது குடித்தனர்.செல்லும் வழியில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி ஆத்திரமடைந்த நாகராஜ், முருகவேலை கீழே தள்ளி அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரின் தலையில் தாக்கினார். பலத்த காயமடைந்த முருகவேல், சம்பவ இடத்திலேயே பலியானார். பெரியபாளையம் போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.நாகராஜை கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி