உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை

விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை

சென்னை, சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, 2012 டிசம்பரில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, 2015ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: விதிமீறல் பிரச்னைகளை சரி செய்வது, 2018ல் பிறப்பித்த அரசாணையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மூன்று மாதங்களில், அரசாணையை அமல்படுத்துவதாக, மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெரிய அளவிலான கட்டட விதிமீறல்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். மேலும், அருகில் உள்ள கட்டட உரிமையாளர்களும் பாதிக்கப்படுவர்.எனவே, விதிமீறல்களை அடையாளம் கண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை, மாநகராட்சி கமிஷனர், பொறியாளருக்கு உள்ளது. கட்டட விதிமீறல்களை அடையாளம் கண்டு, பாகுபாடு காட்டாமல் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ