மேலும் செய்திகள்
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்
08-Sep-2024
வண்ணாரப்பேட்டை, காசிமேடு, ஜி.எம்.பேட்டையைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 30; வலைபின்னும் வேலை செய்தவர்.இவர், கடந்த 6ம் தேதி, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்றார். காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே, 'டாடா ஏஸ்' வாகனத்தில் இருந்து, தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.அங்கிருந்தோர் அவரை மீட்டு, மேல் சிகிச்சைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் இருந்த பிரேம்குமார், நேற்று முன்தினம் நள்ளிரவு, மூளைச்சாவு அடைந்தார்.இதையடுத்து, உறவினர்கள் சம்மதத்துடன், பிரேம்குமார் உடலில் இருந்து, இரண்டு சிறுநீரகம், இரண்டு கண்கள் என, நான்கு உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.அரசு விதிகளின்படி, தமிழக அரசு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் வழியாக பதிவு செய்து காத்திருக்கும் நோயாளிகளுக்கு, அவை தானமாக வழங்கப்பட்டன.இறந்தவருக்கு மனைவி முத்துலட்சுமி, சாய் மித்ரன் என்ற 11 மாத கைக்குழந்தை உள்ளது.
08-Sep-2024