உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடையாறில் மெட்ரோ பணி போக்குவரத்து மாற்றம்

அடையாறில் மெட்ரோ பணி போக்குவரத்து மாற்றம்

சென்னை, அடையாறு டெலிபோன் எக்சேஞ்ச் அருகே, மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று ஒரு நாள் மட்டும், சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றப்பட உள்ளது.காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:டாக்டர் முத்துலட்சுமி சாலையில் இருந்து, திருவான்மியூர் நோக்கி வரும் வாகனங்கள் அடையாறு தொலைபேசி நிலையம் அருகே தடை செய்யப்படும். பின், காமராஜ் அவென்யூ, 2வது குறுக்குத் தெரு - சாஸ்திரி நகர், 1வது பிரதான சாலை - மகாத்மா காந்தி சாலை - லட்டிஸ் பாலம் சாலை வழியாக செல்லலாம். இந்த பாதை ஒருவழி பாதையாக செயல்படும்.திருவான்மியூர் சிக்னலில் இருந்து வரும் வாகனங்கள், மகாத்மா காந்தி சாலையில் வலதுபுறம் திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.திருவான்மியூரில் இருந்து அடையாறு மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்களுக்கு தடை இல்லை; வழக்கம் போல் செல்லலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை