| ADDED : ஆக 01, 2024 12:39 AM
திருவள்ளூர், சென்னை நங்கநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 70; திருமணமாகாதவர். இவர், கடந்த 28ம் தேதி நங்கநல்லுாரிலிருந்து திருப்பதி சென்று விட்டு, திருவள்ளூர் வந்து என்.என்.ரெசின்டென்சி என்ற தனியார் விடுதியில் தங்கியுள்ளார். பின், 30ம் தேதி காலை, தனியார் விடுதி அறைக்குச் சென்று கார் ஓட்டுனர் பார்த்த போது, ராமகிருஷ்ணன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது.இதுகுறித்து உறவினர் சிவராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.