உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரக்கோணம் மின்சார ரயில்கள் சோளிங்கருக்கு வர எதிர்பார்ப்பு

அரக்கோணம் மின்சார ரயில்கள் சோளிங்கருக்கு வர எதிர்பார்ப்பு

சென்னை:அரக்கோணம் சந்திப்பு அடுத்த சோளிங்கரில், புகழ்பெற்ற நரசிம்மர் கோவில், ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.சோளிங்கரில் போதிய ரயில் வசதி இல்லாததால், பயணியர், அரக்கோணம் சென்று, சென்னைக்கு பயணிக்கின்றனர்.எனவே, சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு இயக்கப்படும் மின்சார ரயில்களை, சோளிங்கர் வரை நீட்டித்து இயக்க வேண்டும் என, பயணியர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், சேவை மற்றும் தேவை குறித்து பயணியர் அளிக்கும் கோரிக்கை மனு குறித்தும், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், தெற்கு ரயில்வேயிடம், தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “சோளிங்கர் வரை, மின்சார ரயில்களின் சேவை நீட்டிக்க வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தெற்கு ரயில்வே இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை