உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செம்பியம் ரோந்து போலீசார் மீது ஆட்டோவை மோதிய ஆசாமிகள்

செம்பியம் ரோந்து போலீசார் மீது ஆட்டோவை மோதிய ஆசாமிகள்

பெரம்பூர்:செம்பியம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு செம்பியம் காவல் நிலைய போலீசாரான வினோத்குமார், 36, மற்றும் தட்சிணாமூர்த்தி, 40, ஆகியோர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆட்டோ ஒன்று தாறுமாறாக வேகமாக சென்றது. அதில் இருந்தோர், மது போதையில் சத்தமிட்டபடி சென்றனர்.அவர்களை போலீசார் வினோத்குமார் மற்றும் தட்சிணாமூர்த்தி பின்தொடர்ந்து சென்று, ஆட்டோவை நிறுத்தச் சொல்லி உள்ளனர். உடனே, வேண்டுமென்றே பைக் மீது மோதி சென்றனர்.இதில் போலீசார் இருவரும் கீழே விழுந்தனர். வினோத்குமாருக்கு இடது பக்க தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தட்சிணாமூர்த்தி பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.சம்பவம் குறித்த புகாரின்படி, செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோவில் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை