உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சொத்து தகராறில் 3 பேர் மீது தாக்குதல்

சொத்து தகராறில் 3 பேர் மீது தாக்குதல்

கானத்துார்,முட்டுக்காடு, கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கவியரசு, 28. உஷாதேவி என்பவரிடம் இருந்து, ஒன்றரை சென்ட் இடம் வாங்கி உள்ளார்.இதன் முதல் உரிமையாளராக இருந்த பெருமாள் என்பவரின் சகோதார் ராஜேந்திரன், இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என, கவியரசிடம் கூறி உள்ளார். கானத்துார் போலீசார் விசாரித்ததில், கவியரசுக்கு சொந்தம் என முடிவானது.நேற்று முன்தினம், கவியரசு, இவரின் தந்தை முனுசாமி, 52, தாய் கனகா, 45, ஆகியோர், புதிதாக வாங்கிய இடத்தை சுத்தம் செய்தனர். அப்போது, அங்கு சென்ற பெருமாள், 48, ராஜேந்திரன், 50, குடும்பத்தார் சேர்ந்து, கவியரசு, முனுசாமி, கனகா ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.பலத்த காயமடைந்த மூன்று பேரும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கானத்துார் போலீசார், நேற்று, பெருமாளை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஐந்து பேரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ