சிறுவர்களை தாக்கி பணம் பறிப்பு
சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவர் 'பைக்'கில், ராயப்பேட்டை செங்காத்தம்மன் கோவில் வழியாக, நேற்று அதிகாலை சென்று உள்ளனர். அப்போது, சிறுவர்களை வழிமறித்த மர்ம நபர்கள் நால்வர், கத்தி மற்றும் கையால் தாக்கி, 1,000 ரூபாய் மொபைல் போனையும் பறித்துச் சென்றனர்.இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார், சம்பவம் தொடர்பாக, நான்கு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.