உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நசரத்பேட்டையில் பைக் திருடன் கைது

நசரத்பேட்டையில் பைக் திருடன் கைது

பூந்தமல்லி,பூந்தமல்லி, நசரத்பேட்டை காவல் நிலைய எல்லையில் 'டாஸ்மாக்' கடை மற்றும் மருத்துவமனை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகள், அடிக்கடி திருடப்பட்டு வந்தன. இதையடுத்து, நசரத்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.இதில், பைக்குகளை திருடுவது, குன்றத்துார் அருகே நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வம், 26, என்பது தெரிய வந்தது. இதையடுத்து செல்வத்தை போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவரிடம் இருந்து ஏழு ஸ்கூட்டர் உள்ளிட்ட 10 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !