உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அதிகாரிக்கு கொலை மிரட்டல் பா.ஜ., நிர்வாகிக்கு காப்பு

அதிகாரிக்கு கொலை மிரட்டல் பா.ஜ., நிர்வாகிக்கு காப்பு

பள்ளிக்கரணை, மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மதனகோபால், 43; பா.ஜ., தென்சென்னை மாவட்ட பட்டியல் அணி செயலர்.நேற்று முன்தினம் இரவு, பள்ளிக்கரணை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நீண்ட நேரம் வரவில்லை என்பதால், மதனகோபால் அதே பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை அழைத்து, ராம் நகரில் உள்ள மின் வாரிய துணை மின் நிலைய அலுவலகத்திற்கு சென்றார்.அப்போது அங்கு பணியில் இருந்த லைன் இன்ஸ்பெக்டர் குமார், 54, என்பவரிடம், மின் தடை குறித்து வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்து விசாரித்த பள்ளிக்கரணை போலீசார் மதன்குமாரை நேற்று கைது செய்து, ஆலந்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ