மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
ராயபுரம், வியாசர்பாடியைச் சேர்ந்தவர் லோகநாதன், 64; கொடுங்கையூரில் தனியார் நிறுவன பணியாளர். கடந்த 20ல், பணியிடத்தில் லோகநாதன் நிலைதடுமாறி விழுந்தார்.அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், 'சிடி' ஸ்கேன் எடுத்து பார்த்த போது, தலையில் ரத்த கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி லோகநாதன் மூளைச்சாவு அடைந்தார். அவரது உறவினர்கள் சம்மதத்துடன், லோகநாதனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இரு கண்கள் என, ஐந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.தானமாக பெறப்பட்ட உறுப்புகள், அரசு விதிமுறைகள்படி, பதிவு செய்து காத்திருக்கும் நோயாளிகளுக்கு, தமிழக அரசு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் வழியாக, தானமாக வழங்கப்பட்டன.