கார் தீ பிடித்து எரிந்து நாசம்
எம்.ஜி.ஆர்., நகர்: திருப்பதியைச் சேர்ந்தவர் சுமந்த், 26. இவர் குடும்பத்தினருடன், சென்னை விமான நிலையத்திற்கு வந்த உறவினர் பிரேம்குமாரை, தன் 'ஸ்விப்ட்' காரில் அழைத்து கொண்டு திருப்பதிக்கு திரும்பினார்.எம்.ஜி.ஆர்., நகர் அண்ணா பிரதான சாலையில் வந்தபோது, கார் தீப்பிடித்து எரிய துவங்கியது. சுதாரித்து அனைவரும் கீழே இறங்கினர். அதற்குள் கார் தீக்கரையானது. எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.