மேலும் செய்திகள்
குப்பை தீ வைத்து எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி
08-Mar-2025
ஒட்டியம்பாக்கம்:பரங்கிமலை ஊராட்சிக்கு உட்பட்ட சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், காரணை ஊராட்சிகளில், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இங்கு அமைந்துள்ள சித்தாலப்பாக்கம்- - காரணை சாலை, கேளம்பாக்கத்தை இணைக்கிறது. இதனால், இச்சாலையை வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இச்சாலை மையத்தடுப்பின் இருபுறமும் மண் குவிந்துள்ளது. தவிர, சாலையின் ஓரங்களில் குப்பையால் நிரம்பி உள்ளது.இதனால், சாலை பாதியாக சுருங்கி உள்ளது. காற்று வேகமாக வீசும் நேரங்களில், காற்றில் கலக்கும் மண் துகள்கள், குப்பையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.தவிர, சாலையோர குப்பையை மர்ம நபர்கள் எரிப்பதால் எழும் புகை, கண் எரிச்சல், சுவாச பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் குவிந்துள்ள மண்ணை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
08-Mar-2025