உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிட்டி கிளப் டென்னிஸ்: அடுத்த மாதம் துவக்கம்

சிட்டி கிளப் டென்னிஸ்: அடுத்த மாதம் துவக்கம்

சென்னை, 'ஆர்.டபுள்யூ.டி., ஓபன் சென்னை சிட்டி கிளப் லீக் மற்றும் நாக் - அவுட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2024' போட்டி நடத்துவது குறித்து, தமிழக டென்னிஸ் சங்க நிர்வாகிகள், பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது.சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ், செயலர் பிரேம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், அவர்கள் அளித்த பேட்டி:சென்னையில் உள்ள 16 கிளப்களுக்கு இடையிலான வீரர், வீராங்கனையர் பங்கேற்கும் லீக் மற்றும் நாக் அவுட் போட்டி, அடுத்த மாதம் துவங்கும்; 45 நாட்கள் நடக்கும்.அனைத்து அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 'ரவுண்ட் ராபின்' முறையில் லீக் ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் நாக் - அவுட் சுற்றில் விளையாடும். இதில், சிறந்த வீரர்களான சோம்தேவ் தேவ்வர்மன், ஜி.ராஜேஷ், வினோத் ஸ்ரீதர், விஜய் கண்ணன், சாய் ஜெயலட்சுமி உள்ளிட்டோரும் பங்கேற்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை