உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டி புதர் மண்டிய பூங்கா சிறுவர்கள் ஏமாற்றம்

புகார் பெட்டி புதர் மண்டிய பூங்கா சிறுவர்கள் ஏமாற்றம்

சென்னை, வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு, சின்ன போரூர் மருத்துவமனை சாலையில், மாநகராட்சி சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை, அப்பகுதி குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் பயன்படுத்தி வந்தனர். இதை விட்டால், அப்பகுதியில் வேறு பூங்கா இல்லை. இதனால் லட்சுமி நகர், போரூர் மவுன்ட் - பூந்தமல்லி சாலையில் உள்ள பூங்காவிற்கு செல்ல வேண்டும்.தற்போது, இந்த பூங்கா போதிய பராமரிப்பின்றி செடி, கொடிகள் படர்ந்து, புதர் மண்டி காட்சியளிக்கிறது. எனவே, இந்த சிறுவர் பூங்காவை முறையாக பராமரித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ