மேலும் செய்திகள்
கடையில் திருடிய இருவர் கைது
11-Feb-2025
ஆவடி, ஆவடி அடுத்த பாலவேடு காலனி, மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணி, 70; கூலித்தொழிலாளி. இவரது மனைவி புஷ்பா, 65. தம்பதிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்; மகளுக்கு திருமணமாகி விட்டது.வீட்டில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறையால், மாடியில் குடிசை அமைத்து மனைவியுடன் மணி தங்கி இருந்தார். நேற்று மதியம் 1:00 மணிக்கு அருகில் உள்ள கடைக்கு சென்றபோது, குடிசை திடீரென தீப்பிடித்து எரிவதாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இது குறித்து, ஆவடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அக்கம்பக்கத்தினர், வீட்டில் பேரலில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள், வீட்டு உபயோக பொருட்களுடன் குடிசை தீக்கிரையானது.தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Feb-2025