உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏலச்சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி தலைமறைவாக இருந்த தம்பதி கைது

ஏலச்சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி தலைமறைவாக இருந்த தம்பதி கைது

ஆவடி,அம்பத்துார், ஒரகடம், ஏ.கே.ஏ., நகரைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி, 35. பழக்கடை நடத்தி வருகிறார்.இவரது சின்ன மாமியார் வாயிலாக, அம்பத்துார், அபிராமி தெருவைச் சேர்ந்த என்.எஸ்.எஸ்., பேஷன் டிசைனர் உரிமையாளர் சுரேஷ், 48, மற்றும் அவரது மனைவி சுதா, 40,வுடன் பழக்கம் ஏற்பட்டது.அப்போது, தான் 5 லட்சம் ரூபாய் மாதாந்திர சீட்டு போடுவதாகவும், அதில் சேர்ந்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனவும், புவனேஸ்வரியிடம் சுதா ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்படி, 2024ல், 2 லட்சம் ரூபாய் மாதாந்திர ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளார்.ஏலச்சீட்டு முடிந்ததும் பணத்தை திருப்பி கேட்டபோது, வட்டி தருவதாக கூறிய சுதா, 8 லட்சம் ரூபாய் கடனாகவும் பெற்று கொண்டார்.இதை தவிர, புவனேஸ்வரி, உறவினர்கள் மற்றும் தனக்கு தெரிந்தவர்கள் என, 83 பேரை தீபாவளி சீட்டில் சேர்த்து விட்டு, 8.49 லட்சம் ரூபாய் கட்டியுள்ளார்.இதையடுத்து, ஏலச்சீட்டு, கடன் மற்றும் தீபாவளி சீட்டு என, மொத்தம் 18.49 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது.சுதா தம்பதியர் குறித்து விசாரித்த போது, 2023 முதல் 2024ம் ஆண்டு வரை, 30 பேரிடம் ஏலச்சீட்டு மற்றும் கடன் பெற்று, 70 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியுள்ளது தெரிந்தது.இதுகுறித்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவில், கடந்த வாரம் புவனேஸ்வரி புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீசார், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுாரில் தலைமறைவாக இருந்த சுரேஷ், மற்றும் சுதாவை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை