உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அன்புள்ள அப்பா என்.கே.எம்., தி.நகரில் பாராயணம்

அன்புள்ள அப்பா என்.கே.எம்., தி.நகரில் பாராயணம்

சென்னை, அன்புள்ள அப்பா என்.கே.எம்., என்ற தலைப்பில், தி.நகரில் நான்கு நாட்கள் பாராயணம் நடக்கிறது.ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில், என்.கே.எம்., டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில், 'அன்புள்ள அப்பா - நுாற்றாண்டு என்.கே.எம்.,' என்ற தலைப்பில், தி.நகரில் உள்ள வாணி மஹாலில், நான்கு நாட்கள் பாராயணம் நடக்கிறது.முதல் நாளான நேற்று காலை 8:15 மணிக்கு, ஸ்ரீமத் நாராயணீயம் பாராயணம் நடந்தது. நிகழ்வில் ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இன்று காலை 9:15 மணிக்கு, ஏ.எஸ்.ராகவன் சீடர்களின் திருப்புகழ்; நாளை காலை 9:15 மணிக்கு, விஸ்வாஸால் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடக்கிறது.நாளை மறுநாளான 19ம் தேதி காலை 9:15 மணிக்கு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம் மற்றும் அபிராமி அந்தாதியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை